search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 சதவீத தடுப்பூசி செலுத்திகொண்ட கிராமத்திற்கு பாராட்டு.
    X
    100 சதவீத தடுப்பூசி செலுத்திகொண்ட கிராமத்திற்கு பாராட்டு.

    100 சதவீத தடுப்பூசி செலுத்திகொண்ட கிராமத்திற்கு பாராட்டு

    100 சதவீத தடுப்பூசி செலுத்திகொண்ட கோவிந்தபுரம் ஊராட்சிக்கு சுகாதாரத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்திற் குட்பட்ட, கோவிந்தாபுரம் ஊராட்சியில் உள்ள குடும்பங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் என 1865 பேர் உள்ளனர்.

     இதில் 18 வயதிற்கு மேற்பட்ட 1581 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 100 சதவீத தடுப்பூ செலுத்திய ஊராட்சியாக கோவிந்தாபுரம் ஊராட்சி உள்ளது. இதில் 2-ம் தவணை தடுப்பூசி 1548 நபர்களுக்கு செலுத்தப்பட்டு விட்டது. 

    100 சதவீத இலக்கை எட்ட உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் பழனிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச.பசுபதி, பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

    அவருடன் இணைந்து பணியாற்றிய, ஊராட்சி மன்ற துணை தலைவர், ஊராட்சி செயலர், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களையும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
    Next Story
    ×