search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அமிர்தி பூங்காவில் விலங்குகள் பறவைகள் தீவிர கண்காணிப்பு

    அமிர்தியில் வன ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில் பூங்காவில் உள்ள விலங்குகள் பறவைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள அமிர்தி வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் பொதுமக்கள் பார்வைக் காக கூண்டில் அடைக்கப் பட்டுள்ளன.

    கொரோனா பரவலை தடுக்க பூங்காவில் விலங்குகள் அடைக் கப்பட்டுள்ள கூண்டில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. 

    மேலும் மஞ்சள் பொடி தூவி வரு கின்றனர். நுழைவுவாயிலில் பொதுமக்களுக்கு கைகழுவும் வசதி செய்யப் பட்டுள்ளது.

    வன ஊழியர்கள் மூலம் விலங்குகளுக்கு நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர். அமிர்திப் பூங்காவில் உள்ள வன ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்து வரு கின்றனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இவர்கள் மூலம் விலங்குகளுக்கு பரவாமல் இருக்க பூங்கா காலவரையின்றி மூடப் பட்டுள்ளது.

    கடந்தவாரம் அமிர்திப் பூங்காவில் உள்ள மான்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 

    இதில் விலங்குகளுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது ஊழியர்கள் 17 பேர் பாதிக் கப்பட்டுள்ளதால் பூங்காவில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×