என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ரூ.5.84 கோடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை கணொலிக்காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
Byமாலை மலர்20 Jan 2022 8:21 AM GMT (Updated: 20 Jan 2022 8:21 AM GMT)
அறந்தாங்கி, ஆவுடையார் கோவிலில் ரூ.5.84 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்தது வைத்தார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் 52 ஊராட்சிகளில் 105 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஆவுடையார்கோவில் தாலுகாவில் 35 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டா, சிட்டா மாறுதல், வருமானச்சான்று, போன்ற வருவாய்த்துறை தொடர்பான தேவைகளுக்கு அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகம் பெற்று வந்தனர்.
இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தில் போதிய உறுதித்தன்மை குறைந்ததால், அதனை மாற்றி புதியக் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக அங்கிருந்த தாலுகா அலுவலகம் கடந்த 2020 ஆம் ஆண்டு வேறு தனியார் வாடகைக் கட்டிடத்திற்க்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பழைய தாலுகா அலுவலகம் அகற்றப்பட்டு ரூ.2 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. அதேபோன்று ஆவுடையார்கோவிலில் ரூ.2 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவகங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலம் செயல்பாட்டிற்க்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கலெக்டர் கவிதாராமு, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகரச் செயலாளர் ஆனந்த், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பரணி கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் கலைமணி, முன்னாள் நகரச்செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பொன்கணேசன், சக்திராமசாமி உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×