என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கூடுவாஞ்சேரி அருகே மது விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்20 Jan 2022 3:45 AM GMT (Updated: 20 Jan 2022 3:45 AM GMT)
கூடுவாஞ்சேரி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசு விடுமுறையான தைப்பூச தினத்தில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்து (வயது 35) என்பவர் திருட்டுத்தனமாக மது விற்றுக்கொண்டிருந்தார். உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல மறைமலைநகர் அண்ணா சாலை பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்ததாக மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×