என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜவுளிக்கடையில் கொள்ளை
ஜவுளிக்கடையில் பணம் கொள்ளை
திருத்தங்கல்லில் உள்ள ஜவுளிக்கடையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது42). இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். தொழில் தேவைக்காக தனது நகைகளை அடகு வைத்து ரூ. 2.65 லட்சத்தை திரட்டினார்.
சம்பவத்தன்று அந்த பணத்தை தனது கடையின் டேபிளில் வைத்துள்ளார். அப்போது கடைக்கு வந்து 2 வடமாநில வாலிபர்கள் ஜவுளி எடுத்துவிட்டு சென்றனர்.
அவர்கள் சென்ற பிறகு கடையில் இருந்த ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து பால்பாண்டி திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதில் கடைக்கு ரெடிமேட் வாங்க வந்த 2 வடமாநில வாலிபர்கள் பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






