என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
போராட்டம்
கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
By
மாலை மலர்18 Jan 2022 8:54 AM GMT (Updated: 18 Jan 2022 8:54 AM GMT)

பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி, 5ஜி சேவையை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
கோவை:
இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவ னத்திற்கு 4ஜி, 5ஜி அலைக்கற்றை அனுமதி வழங்கிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு செல்பி எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு இதுவரை 4 ஜிக்கான தொழில்நுட்ப உதவியும், நிதிஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. அதேபோல 5ஜி அனுமதி தற்போது பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. ஆனால் பி.எஸ்.என்.எல்&-க்கு 5ஜிஅனுமதி வழங்கப்படவில்லை.
அரசுத்துறை நிறுவன மான பி.எஸ்.என்.எல்&யை புறக்கணிக்கும் விதமாகவும், நலிவடைய செய்யும் நோக்கத்தோடும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது கொரானா தொற்றின் 3&வது அலை தொடங்கியுள்ள காரணத்தால் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வருகின்ற நேரத்தில் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் கடுமையான கட்டண உயர்வை செய்துள்ளது. ஏற்கனவே, பெரும் தொற்றின் காரணமாக வழக்கமான வருமானத்தை இழந்துள்ள மக்கள் தற்போது இணைய தொடர்புக்காக அதிக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பி.எஸ்.என்.எல் நிறுவ னம் குறைவான கட்டணங் களுடன் சேவையாற்றி வருகின்றது.
எனவே, மத்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி அலைக்கற்றை உரிமையையும் அதை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும். தனியார் தொலைதொடர்பு நிறுவனங் களின் கட்டண உயர்வை குறைத்திட அரசு தலையிட வேண்டும் என்றனர்.
இந்த போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
Next Story
×