என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிர்களுக்கு இழப்பீடு வழங்க காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை.
நெற்பயிர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என காமராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ.
அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவலை தடுத்திடும் வகையிலும், நோய்த்
தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும் முக்கிய
கவனம் செலுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு
மேற்கொள்ள வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு
உடனடியாக முழு நிவாரணத்தையும் அரசு வழங்கிட வேண்டும்.
உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். நெல்லை கொள்முதல் செய்ய ஆன்லைன் திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story