என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடத்தில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
நேற்று காலை அங்குள்ள தங்கும் அறை கூரையில் கம்பியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பல்லடம்:
பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரி ஒன்றில் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுக்கா ஜம்பலிபள்ளி பகுதியைச் சேர்ந்த மது மகன் அய்யன்துரை,24, என்பவர் கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊருக்குச்சென்றனர் நேற்று முன்தினம் இரவு கல்குவாரிக்கு திரும்பினார்.
இந்தநிலையில் நேற்று காலை அங்குள்ள தங்கும் அறை கூரையில் கம்பியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் பார்த்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து அவரது அக்கா பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story