என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
சாராயம் கடத்தி வந்த 4 வாலிபர்கள் கைது
கீழ்வேளூர் அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய கடத்தலை தடுக்கும்
வகையில் போலீசார் வாகன சோதனை, ரோந்து பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம் வட்டம் கீழ்வேளூர் அருகே
காக்கழனி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில்
அதில் சாராயம் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் நாகை பாப்பாகோவில் சமத்துவபுரம்
விக்னேஷ் (வயது 21), அதே பகுதி ஜோதிபாசு (21) என தெரிய வந்தது.
இதே போல தேவூர் கடைதெருவில் நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த நாகை அந்தணப்பேட்டை கடைதெரு மணிகண்டன் (20), சிக்கல் ரயிலடி தெரு முகமதுரபீக் (26) ஆகிய 2 பேர் பிடிபட்டனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும்
கைது செய்து சாராயம், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Next Story






