என் மலர்
உள்ளூர் செய்திகள்

விதைப்பந்து விதைத்தல் பணி நடைபெற்றது.
விதைப்பந்து விதைத்தல் பணி
மதுக்கூர் அருகே விதைப்பந்து விதைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
மதுக்கூர்:
பட்டுக்கோட்டை அருகே உழவர் திருநாளான்று நாற்றங்கால் அறக்கட்டளை சார்பில் 100 விதைப்பந்துகள் விதைத்தல் மற்றும் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாகன புகை அதிகமாக வெளியேறுதல் தொழிற்சாலை புகை வெளியேறுதல், கழிவுகளை வெளியேற்றுதல் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனையடுத்து பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகின்றது.இதனை சரி செய்ய தமிழக அரசு மற்றும் பல்வேறு சமூக சேவைகள் என இதனை சரி செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் இயற்கை வளமும் பெறுவதற்கும், பருவ நிலை மாற்றத்தை சமாளிக்கும் விதமாக நாற்றங்கால் அறக்கட்டளை என்னும் அறக்கட்டளையை டிசம்பர் 2021-ம் ஆண்டு 26-ந்தேதி ஏற்படுத்தப்பட்டது.
இதன் நோக்கம் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுவதை சரிசெய்யும் விதமாக மரக்கன்றுகள் நடுதல் விதைப்பந்துகள் என பல்வேறு வகைகளில் மக்கள் இயற்கை வளமும் பெற்று வாழ இயற்கை பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து பட்டுக்கோட்டை வட்டம் அத்திவெட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட புத்தடிக் குளக்கரையில் 100 விதைப் பந்து விதைத்தல் மற்றும் 50 மரக்கன்றுகள் நடுதல் நடைபெற்றன.
இயற்கையை மேம்படுத்தும் இந் நிகழ்வை நாற்றங்கால் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியில் நாற்றங்கால் அறக்கட்டளை நிறுவனர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். தலைவர் குமரவேலு உரையாற்றினார். குமார், முருகேசன், பழனிவேல், ராஜேந்திரன், சேகுவேரா, மகிழ்நன் மற்றும் பொது மக்களும் கலந்துக் கொண்டனர்.
Next Story