search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 929 வாகனங்கள் பறிமுதல்
    X
    ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 929 வாகனங்கள் பறிமுதல்

    சென்னையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 929 வாகனங்கள் பறிமுதல்

    சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி முகக்கவசம் அணியாதது தொடர்பாக 3,947 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.7,89, 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.
    சென்னை:

    சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி, நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 5 மணி வரை ஊரடங்கை மீறியது தொடர்பாக 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தேவையின்றி வெளியே சுற்றிய 877 இருசக்கர வாகனங்கள், 27 ஆட்டோக்கள் மற்றும் 25 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 929 வாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    முகக்கவசம் அணியாதது தொடர்பாக 3,947 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.7,89, 400 அபராதமும், சமூக இடைவெளியை கடை பிடிக்காதது தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.20,000 அபராதமும் வசூலிக்கப்பட்டது. 

    Next Story
    ×