என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம்:
வெளியூர்களில் தங்கி பணி புரிந்தவர்கள் மற்றும் தொழில் செய்பவர்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட கடந்த வாரம் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் இரவில் ஏராளமானோர் மீண்டும் சொந்த ஊர்களில் இருந்து புறப்பட தயாராகினர்.

ஆனால் நேற்று முழு ஊரடங்கு என்பதால் அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இன்று காலை 5 மணி முதலே வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னை, கோவை, திருப்பூர், வேலூர், திருச்சி, தஞ்சை, கரூர் மற்றும் பெங்களூர் என பல்வேறு பகுதிகளுக்கும் புறப்பட்டு சென்றனர்.
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதே போல சேலத்தில் இருந்தும் சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, தஞ்சை, நாகை, நெல்லை என பல்வேறு ஊர்களுக்கும் 250&க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில் சென்னை, பெங்களூர், கோவை மற்றும் திருப்பூர் செல்லும் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு நாளை வரை விடுமுறை என்பதால் நாளை முதல் அவர்களும் பணிக்கு புறப்பட்டு செல்வார்கள்.
இதனால் வருகிற 19 ம் தேதி வரை பயணிகள் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், அதனை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Next Story