என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
மது பதுக்கி விற்ற 9 பேர் கைது
கரூரில் சட்டவிரோதமாக மது பதுக்கி விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பெரிய ரங்கம்பாளையம் பகுதியில் வீட்டில் மது பாட்டில்களை வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது, அங்கு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் புன்னம்சத்திரம் அருகே உள்ள பெரியரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 34), அதே பகுதியை சேர்ந்த வசந்தா (63), சாவித்திரி (48), வளர்மதி (50) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தோட்டக்குறிச்சி அருகே செங்காட்டனூர் சேர்ந்த அருண்குமார் (34), புகளூர் ஹை ஸ்கூல்மேடு அருகே உள்ள மாநகராட்சி கட்டிடத்தின் பின்புறம் மது பாட்டில்களை விற்பனை செய்த புகளூர் வள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40), அய்யம்பாளையத்தில் டாஸ்மாக் கடை பின்புறம் மது விற்பனை செய்த திருச்சி திருப்புராத்துறை பகுதியைச் சேர்ந்த கோபி (31,) காந்திநகர் 2-வது தெருவில் உள்ள வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்த பிரபாகரன் (30), புன்னம்சத்திரம் அருகே சுண்ணாம்பரப்பு பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்த புன்னம்சத்திரம் அருகே உள்ள பெரிய ரெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வளர்மதி (50) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 132 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story