என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 12 பேர் கைது
கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதையடுத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் பூத்துகள், பெட்ரோல் பங்க்குகள் தவிர்த்து டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் திருச்சி மாநகரில் பல இடங்களில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
பின்னர் கண்டோன்மென்ட், காந்திமார்கெட், கோட்டை, ஸ்ரீரங்கம், பொன்மலை உள்ளிட்ட காவல்நிலைய எல்லைகளில் கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வசமிருந்த 254 மதுபான பாட்டில்களும், ரூ. 380 ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது.
Next Story