என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கவர்னர் ஆர்.என்.ரவி
  X
  கவர்னர் ஆர்.என்.ரவி

  கன்னியாகுமரிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வருகிறார்.
  நாகர்கோவில்:

  தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக கன்னியாகுமரி வருகிறார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு   19 -ந்தேதி மாலை வருகிறார்.

  பின்னர் அங்கிருந்து கார் மூலமாக கன்னியாகுமரி வருகிறார். இரவு விவேகானந்தா கேந்திராவில் தங்குகிறார். 20-ந் தேதி காலை கேந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர் மதியம் கார் மூலமாக தூத்துக்குடி செல்கிறார்.

  அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார். கவர்னர் கடந்த நவம்பர் மாதம் ஏற்கனவே கன்னியாகுமரி வர இருந்த நிலையில் தற்போது 2-வது முறையாக குமரி மாவட்டத்திற்கு வருகிறார். கவர்னர் வருகையை யடுத்துபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் அரவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் மாவட்ட வருவாய் அதிகாரி சிவபிரியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×