search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் மூழ்கி பலியான சிறுமிகள் குடும்பத்தினருக்கு எ.வ. வேலு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
    X
    ஏரியில் மூழ்கி பலியான சிறுமிகள் குடும்பத்தினருக்கு எ.வ. வேலு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

    ஏரியில் மூழ்கி பலியான சிறுமிகள் குடும்பத்துக்கு உதவி

    திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி பலியான சிறுமிகள் குடும்பத்துக்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவியை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சு.கம்பம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாபூப் கான்.இவரதுமகள்களான நஸ்ரின் (வயது15) நசீமா (15) ஷாகீரா (12) ஆகியோர் நேற்று முன்தினம் ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்ற ஆட்டுக் குட்டியை காப்பாற்ற முயன்ற போது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    அவர்கள் உடல்கள் திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

    இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் எ.வ.வேலு சிறுமிகளின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் ரூ.1.50லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
    அவர் கூறுகையில்:& இந்த கிராமத்தையொட்டி உள்ள ஏரியில் 3 சிறுமிகள் மாட்டு பொங்கல் அன்று ஆடுகளை குளிப்பாட்டுவதற்காக ஓட்டிச் சென்றபோது ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது முதல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு  சென்று இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான பிச்சாண்டியிடம் விசாரணை நடத்த கூறினார்.

    தற்போது மாவட்ட கலெக்டர் நிதியில் இருந்து பலியான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.50 ஆயிரம் வீதம் ரூ. 1.50 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இதுகுறித்து முதலமைச்சரிடம் தெரிவித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அப்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், டாக்டர் கம்பன், கூடுதல் கலெக்டர் பிரதாப், ஆர்.டி.ஓ.வெற்றிவேல், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×