என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கன்னியாகுமரி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    நாகர்கோவில்:

    தமிழகத்தின் மற்ற மாவட்டங்களைவிட குமரி மாவட்டத்தில் மிதமான சீதோஷ்ன நிலை நிலவும். இதனால் கேரளா போல் குளுகுளு சூழல் நிலவும். இதன் இனிமையை அனுபவிக்கவே இங்குள்ள  சுற்றுலா தலங்களுக்கு  வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில்  இருந்து   சுற்றுலா பயணிகள்  வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் முன்பு  வருடத்தில்  9 மாதங்கள் மழை பொழிவு இருக்கும். ஜுன், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர்    ஆகிய 4 மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழையில்தான்  குமரியில் அதிக மழை பொழிவு இருக்கும். தற்போது இந்த மழை காலம் 3 மாதங்களாக குறைந்து விட்டது.

    ஆனால், கடந்த சில ஆண்டுகளாக குமரியில் வடகிழக்கு பருவ மழை அதிகம் பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு  வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால்  மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

    தற்போது மழை ஓய்ந்து விட்டது. பனி பொழிவு தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக நாகர்கோவில், கன்னியா குமரி, தோவாளை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில்  கடும்பனிப்பொழிவு  ஏற்பட்டு வருகிறது.

    அதிகாலை நேரத்தில்  இன்னும்  அதிகமாக பனிப்பொழிகிறது. இதனால் இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவுகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு மிகவும் அதிகமாகி உள்ளது. அதிகாலை  4 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில்  பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது.

    இரவில் பனி பெய்தாலும் பகலில் வெயில் அதிகமாக இருக்கிறது. பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது. காலை நேரத்தில் இருந்தே சூரியன் சுட்டெரிக்க தொடங் கிவிடுகிறது.

    பின்னர்  வெயிலின் தாக்கம்  அதிகரித்து வீட்டில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையாகிறது. கடந்த சில நாட்களாக பகலில் அனல் காற்றும் வீசுகிறது.

    Next Story
    ×