search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டை
    X
    முட்டை

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு

    பொங்கல் பண்டிகை, தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகை எதிரொலியாக முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. முட்டை விலை குறைவால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ. சி.சி.) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.60 ஆக இருந்த முட்டை விலை, 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-

    சென்னை 4.75, பர்வாலா 4.67, பெங்களூர் 4.70, டெல்லி 4.85, ஹைதராபாத் 435, மும்பை 5.00, மைசூர் 4.65, விஜயவாடா 4.62, ஹொஸ்பேட் 4.30, கொல்கத்தா 5.15.

    பொங்கல் பண்டிகை, தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகை எதிரொலியாக முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. முட்டை விலை குறைவால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 100 ஆக பி.சி.சி. நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.75 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×