என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    119-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி
    X
    119-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி

    தொண்டி அருகே 119-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய மூதாட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தொண்டி அருகே 4 தலைமுறைகளை சேர்ந்த குடும்பத்தினருடன் தனது 119-வது பிறந்தநாளை கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் மூதாட்டி கொண்டாடினார்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாப்பனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி லட்சுமி அம்மாள். 119 வயது மூதாட்டியான லட்சுமி அம்மாளுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

    மேலும் பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளப்பேத்தி என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். 20 வருடங்களுக்கு முன்பு கருப்யையா இறந்து விட்டார். இந்த நிலையில் 119-வது வயதை தனது உறவுகளுடன் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் லட்சுமி அம்மாள் கொண்டாடினார்.

    இதில் 4 தலைமுறைகளை சேர்ந்த குடும்பத்தினர் பங்கேற்றனர். இவர் தற்போது வரை கம்பு, கேழ்வரகு என தானிய வகைகளை சாப்பிட்டு வருகிறார். அதிகாலையிலேயே எழுந்து தன்னால் முடிந்த வீட்டு வேலைகளை செய்து வருகிறார்.

    இவரது வாழ்க்கை முறை தற்போதுள்ள இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இவரது கணவர் இறந்து 20 ஆண்டுகள் ஆகியும் தன்னம்பிக்கையுடன், கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்த பணிகளைச் செய்து உழைப்போடும், இயற்கையோடும் லட்சுமி அம்மாள் வாழ்ந்து வருகிறார். 
    Next Story
    ×