search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    சம்பா நெற்பயிர் அறுவடை

    திருச்சி மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் தொடங்கி உள்ளன.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் 1.07 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் மணிகள் அறுவடைக்குத் தயாராக இருப்பதால், பொங்கலுக்குப் பிறகு அறுவடைப் பணிகள் தீவிரமாகும் என்று கூறி, மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே செயல்பட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், தேவையான இடங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களையும் மாவட்ட நிர்வாகம் திறக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

    அந்த வகையில் பொங்கல், மாட்டுப் பொங்கல் முடிவடைந்த நிலையில், சம்பா நெல் அறுவடை பணிகள் தொடங்கியது.
    முழுநேர ஊரடங்கு நாளான நேற்று சம்பா நெல் அறுவடைப் பணியில் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது, நடப்பாண்டு குறித்த நேரத்தில் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதுடன், நல்ல மழையும் பெய்ததால் நல்ல முறையில் சம்பா நெல் விளைச்சல் கிடைத்துள்ளது. குழுவாக சேர்ந்து அறுவடைப் பணியில் ஈடுபடும் எங்களுக்கு ஏக்கருக்கு 5 மூட்டை நெல் வீதம் ஊதியம் கிடைக்கும்.

    நடப்பாண்டு தை முதல் மாசி வரையிலான ஒரு மாதம் முழுவதும் அறுவடைப் பணிகள் இருக்கும் என்றனர்.
    Next Story
    ×