என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரணமல்லூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.
  சேத்துப்பட்டு:

  திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 21). ஆட்டோ டிரைவர். பரத்குமார் இஞ்சிமேடு கிராமத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பெரணமல்லூர் திரும்பிக் கொண்டிருந்தார்.

  அப்போது வடுவன்குடிசை சுடுகாடு பகுதி அருகே ஆட்டோ வந்தபோது நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரத்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

  உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

   அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செய்யார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத்குமார் இறந்தார். 

  இதுகுறித்து பரத்குமாரின் தந்தை அன்பு பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×