என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் மற்றும் மாவட்ட பிரதிநிதி மோகன் மற்றும் பலர் கலந்த
  X
  விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் மற்றும் மாவட்ட பிரதிநிதி மோகன் மற்றும் பலர் கலந்த

  பொங்கலையொட்டி மாடு விடும் நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆலங்குடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடு நடைபெற்ற மாடு விடும் நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசடிப்பட்டி 4 ரோட்டில் மாவட்ட பிரதிநிதி கே.வி.எஸ்.ஏ.மோகன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா, மாடு விடும் போட்டி நடைபெற்றது.

  வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க   மாநிலத்தலைவர் ரெ.தங்கம் துவக்கி வைத்தார்.

  மேலும் மஞ்சு விரட்டு காளை உரிமையாளர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். பின்னர் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், மாநில தலைவர் ரெ.தங்கத்துக்கும், அந்த கிராமத்து மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்து மரியாதை செய்தனர்.

  விழாவில் சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் ஏ.கே.செல்வம், கறம்பக்குடி அருகே உள்ள கரு.தெற்கு தெரு ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கப்பன், அடைக்கலம், புதுப்பட்டி கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்களும், கழக நிர்வாகிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.

  Next Story
  ×