என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் கொண்டாட மாட்டுவண்டியில் வரும் நாகை கலெக்டர்.
    X
    பொங்கல் கொண்டாட மாட்டுவண்டியில் வரும் நாகை கலெக்டர்.

    மாட்டுவண்டியில் சென்று பொங்கல் கொண்டாடிய கலெக்டர்

    மாட்டுவண்டியில் சென்று நாகை கலெக்டர் பொங்கல் கொண்டாடினார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், அம்பல் கிராமத்தில் மாட்டு 
    பொங்கல் விழா நடைபெற்றது. 

    விழாவிற்கு வந்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், 
    முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோரை 
    மாட்டு வண்டியில் சென்று மேளதாளத்துடன் 
    கிராமத்திற்கு மக்கள் அழைத்து வந்தனர்.

    நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கு சூடம் ஏற்றி வணங்கி, 
    கால்நடைத்துறை சார்பாக 100-க்கும் மேற்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினர். 

    தப்படித்து நடனமாடி கிராம மக்களோடு பொங்கல் 
    விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். 

    தங்களது மாடுகளுக்கு மாலையிட்டு அலங்கரித்து 
    மாட்டு பொங்கல் விழாவை கொண்டாடிய 
    அப்பகுதி மக்கள் மஞ்சள் தண்ணீரை மாடுகளின் மீது 
    தெளித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

    இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
    Next Story
    ×