search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பு அருகே முகாமிட்டுள்ள யானை கூட்டம்
    X
    குடியிருப்பு அருகே முகாமிட்டுள்ள யானை கூட்டம்

    கோவையில் குடியிருப்பு அருகே முகாமிட்டுள்ள யானை கூட்டம்

    தொண்டாமுத்தூர் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    வடவள்ளி:

    கோவை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே  மேற்கு தொடர்ச்சி மலை கெம்பனூர் வனப்பகுதியில் நேற்று குட்டியுடன் 4 யானைகள் வந்தது. தொடர்ந்து அங்குள்ள தோட்டத்திற்குள் புகுந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    யானைகள் குட்டியுடன் மேற்கு தொடர்ச்சி மலைக்குட்பட்ட கெம்பனூர் வனப்பகுதியில் நேற்றிலிருந்து முகாமிட்டுள்ளது. யானைகள் அசைவின்றி ஒரே இடத்தில் இருப்பதாலும், பொதுமக்களின் கண்ணுக்கு படும் தூரத்தில் தெரிந்து வருகிறது. 

    இதனால் அண்ணாநகர், கெம்பனூர், அட்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பொதுமக்கள் முகாமிட்டுள்ள யானைகளை பார்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

    தொடர்ந்து யானைகள் அதே பகுதியில் இருப்பதால் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×