என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாங்கண்ணி கடற்கரை அதிக மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடக்கும் காட்சி.
கொரோனா கட்டுப்பாடு - களை இழந்த வேளாங்கண்ணி கடற்கரை
கொரோனா கட்டுப்பாட்டால் வேளாங்கண்ணி கடற்கரை பொதுமக்களின்றி வெறிச்சோடியது.
நாகப்பட்டினம்:
கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
நிலையில் மாநில அரசு வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட மூன்று
தினங்களும் வழிபாட்டு தலங்களை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
அமலில் உள்ளது.
இந்நிலையில் தொடர் பொங்கல் விடுமுறை காரணமாக நாகை
மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற முக்கிய
சுற்றுலாத்தலங்களில் ஒன்றான வேளாங்கண்ணி புனித
ஆரோக்கிய அன்னைப் பேராலயத்திற்கு, ஆயிரத்துக்கும்
அதிகமான பக்தர்கள் வந்து, உற்சாகமாக பொழுதை கழிப்பது
வழக்கம்.
இந்நிலையில் அரசின் உத்தரவின்படி, வேளாங்கண்ணி
பேராலயம் மூடப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை
வெகுவாக குறைந்துள்ளது.
கடலில் குளித்து மகிழும் இடம் தற்பொழுது, மிக குறைந்த
அளவிளான சுற்றுலாப் பயணிகளோடு வெறிச்சோடி காணப்படுகிறது.
வியாபாரிகள் வியாபாரம் இல்லை என வருத்தம் தெரிவித்தனர்.
Next Story






