என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வெறிச்சோடிய நீலகிரி சாலைகள்
  X
  வெறிச்சோடிய நீலகிரி சாலைகள்

  முழு ஊரடங்கால் வெறிச்சோடிய நீலகிரி சாலைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலகிரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
  ஊட்டி:
   
  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தமிழகத்தில் கடந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று  2-வது வாரமாக நீலகிரியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

  நீலகிரியில் ஊட்டி-சேரிங்கிராஸ் சாலை, கமர்சியல் சாலை, பஸ் நிலைய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதிகளில் எந்தவித மக்கள் நடமாட்டமோ, வாகன இரைச்சலோ இன்றி மிகவும் அமைதியாக இருந்தது. 

  குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் என முக்கிய பகுதிகளிலும் கடைகள்  அனைத்தும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு  கடைபிடிக்கப்பட்டது. முக்கிய சாலைகளான ஊட்டி-குன்னூர் சாலை, மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலை,  கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடந்தது.

  நீலகிரியில் முழு ஊரடங்கை யொட்டி மாவட்டம் முழுவதும் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 5 காவல் உட்கோட்டங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பை தீவிரப் படுத்தினர். விதி முறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். மாவட்ட எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
  Next Story
  ×