என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்பு படம்.
குமரியில் அனுமதியின்றி திருட்டு மது விற்ற 39 பேர் கைது
By
மாலை மலர்16 Jan 2022 6:45 AM GMT (Updated: 16 Jan 2022 6:45 AM GMT)

கன்னியாகுமரியில் அனுமதியின்றி திருட்டு மது விற்ற 39 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
அனுமதியின்றி திருட்டு மது விற்பனை செய்பவர் களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள். திருவள்ளுவர் தினமான நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது.
இதையடுத்து அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
சுசீந்திரம், அக்கரை பகுதியில் அனுமதியின்றி மது விற்ற சிவராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். குலசேகரம் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி தக்கலை, இரணியல், குளச்சல், நாகர்கோவில் பகுதிகளில் மது விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோட்டார் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இடலாக்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வட்டவிளையைச் சேர்ந்த தனுஷ் என்பவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ரெயில்வே ரோடு பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா வைத்திருந்த வெள்ளிச் சந்தையைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×