என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோரம் வசிப்போருக்கு பொங்கல் பரிசு வழங்கிய போலீசார்
சாலையோரம் வசிப்போருக்கு போலீசார் மனிதநேய உதவி
செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் எதிரே சாலையோரம் வசிப்பவர்களுக்கு பொங்கல் பொருட்களை போலீசார் வழங்கினர்.
தரங்கம்பாடி:
செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் எதிரே சாலையோரம் வீடுகளின்றி 20&க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ரேஷன் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடையாது என்பதால் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் அந்த குடும்பங்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து, பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம், கரும்பு ஆகிய பொருட்களை இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் தங்கள் சொந்த செலவில் வழங்கினர்.
கடந்த தீபாவளி அன்று இனிப்பு மற்றும் பட்டாசுகளை இவர்களுக்கு இதுபோல் போலீசார் வழங்கியது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் மனிதநேயத்தை பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story