என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பலியான சிறுவன் ராகுல்.
    X
    பலியான சிறுவன் ராகுல்.

    காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுவாமிமலையில் காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் இறந்தான்.
    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே கங்காநாதபுரத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். 

    இவரது மகன் ராகுல் (வயது13). அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 
    8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 
    தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். 

    அப்போது, ஆற்றில் தண்ணீர் சுழலில் ராகுல் மூழ்கினான். இதுகுறித்து நண்பர்கள் அக்கம்பக்கத்தில் தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் 
    மற்றும் கும்பகோணம், பாபநாசம் தீயணைப்பு நிலைய வீரர்கள் ராகுலை ஆற்றில் இறங்கி தேடினர்.

    தொடர்ந்து இரவான நிலையில், நேற்று காலை மீண்டும் தேடியபோது சுவாமிமலை அருகே நாணலில் சிக்கியிருந்த ராகுலின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×