என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஸ்வேதா. இவரது கணவர் கணேசன். கோவை மாவட்டம் குனியமுத்தூரில் மூதாட்டி ஒருவர் வீட்டில் திருட்டு நடந்தது.
குனியமுத்தூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசனை தேடி துத்தி பட்டுக்கு வந்தனர்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற கணேசனை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது கணேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கி விட்டு கை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பிச்சென்றார். தலைமறைவாக இருந்த கணேசனை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கணேசன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் திருப்பத்தூர் போலீஸ் சூப்ரிண்ட்டு பாலகிருஷ்ணன் குண்டர் சட்டத்தில் கணேசனை அடைக்க பரிந்துரை செய்தார்.
கலெக்டர் அமர்குஷ்வாஹா குண்டர் சட்டத்தில் கணேசனை அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள கணேசனிடம் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.
Next Story