என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழங்குடியின மக்கள் பொங்கல் கொண்டாடிய காட்சி.
ஊட்டியில் பழங்குடியின மக்கள் கொண்டாடிய பொங்கல் விழா
பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர்.
ஊட்டி:
மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் இருளர் மற்றும் குறும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டி கையை மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போன்று பொங்கலை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.கோத்தகிரி அருகே மாமரம், மேல்கூப்பு குறும்பர் பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர்.
அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தங்களின் குலதெய் வத்தை வணங்கி பொங்கல் வைத்தனர். தொடர்ந்து ஆடி, பாடி பொங்கலை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பழங்குடியின மக்களுடன் பொங்கல் கொண்டாடினர். மேலும் பழங்குடியின இளைஞர்களுக்கு விளையாடுவதற்கு தேவையான பொருட்களை வழங்கினார்.
நூற்றாண்டுகளைக் கடந்து குறும்பர் பழங்குடியின மக்கள் பாரம்பரியமாக பொங்கல் திருவிழாவை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story