என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருந்திருந்த பெண் தொழிலாளி.
பொங்கல் மண்பானை விற்பனை மந்தம்
பொங்கல் மண்பானை விற்பனை மந்தமாக இருந்ததால் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள மழையூர், கறம்பக்குடி, வாண்டான் விடுதி, உட்பட இதர பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளன.
வழக்கமாக பொங்கல் பண்டிகை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான மண் பானைகள் மற்றும் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடு படுவது வழக்கம். ஆண்டின் ஒருமுறை வெகு விமரிசையாகவும், பாரம்பரிய முறைப்படியும் கொண்டாடப்படும் இந்த பண்டிகைக்காக மண் பாண்ட தொழிலாளர்கள் முழுவீச்சில் பங்கேற்பார்கள்.
ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட பொங்கல் பானைகள் விற்பனை பெரும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதுகுறித்து ஆலங்குடி சந்தையில் கரும்பிரான் கோட்டையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:&
பொங்கல் பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் இவர்கள் தயாரிக்கும் மண்பாண்டங்கள் விதவிதமாக தயார் செய்து, அந்தந்த பகுதியில் உள்ள வாரச்சந்தையில் மக்கள் பார்வைக்கு அடுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இப்பகுதி மண் பாண்டக்கலை தொழிலாளர்கள் பாரம்பரியமாக இத்தொழில்நுட்பம் தெரிந்து ஆர்வத்துடன் பிழைப்பு நடத்தி வந்தாலும் போதிய வருவாய் பார்க்க இரவு, பரவலாக உழைக்க வேண்டியுள்ளது.
சமையல் அறைகளை எப்போது உலோக பாத்திரங்கள் ஆக்கிரமிக்க துவங்கியதோ அப்போதிலிருந்தே மண் பாண்ட தொழில் சரிய ஆரம் பித்துவிட்டது.
ஒரு பானை 150 ரூபாயிலிருந்து 200 வரை விலைபோகிறது. பொங்கல் வழக்கப்படி மண் பானையில் சமைத்தால் கிடைக்கும் ருசி தனி. கிராம மக்கள் அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தினாலும் மண் பாண்டங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை இன்றும் கொடுத்து வருகிறோம் என்று கூறினார்.

Next Story