என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILE PHOTO
  X
  FILE PHOTO

  தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேருக்கு போலீசார் வலை

  கரூர்:

  கரூர் மாவட்டம் தளவாபாளையம் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 40), தொழிலாளியான இவர், தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அறிவழகன், மாரி, மணி ஆகியோர் ராஜசேகரனை தடுத்து நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரமடைந்த அறிவழகன் உள்பட 3 பேரும் கீழே கிடந்த கட்டையை எடுத்து ராஜசேகரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ராஜசேகரன் வலியால் அலறி துடித்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், அவர்கள் 3 பேரும் ராஜசேகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

  இந்த சம்பவம் குறித்து ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் சப்&இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் வலை வீசி தேடிவருகிறார்.
  Next Story
  ×