என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பயனாளி ஒருவருக்கு அமைச்சர்  தங்க நாணயம் வழங்கிய காட்சி
    X
    பயனாளி ஒருவருக்கு அமைச்சர் தங்க நாணயம் வழங்கிய காட்சி

    நீலகிரியில் 17 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் தாலிக்குத் தங்கம் வழங்கும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:
    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் 17 பயனாளி களுக்கு தலா 8 கிராம் வீதம் தாலிக்குத் தங்கம் வழங்கி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    2021-2022-ம் ஆண்டில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு பயின்ற ஒரு பெண்ணுக்கு திருமண நிதியுதவியாக ரூ. 50 ஆயிரம் வீதம் 330 பயனாளிகளுக்கு ரூ. 1,65,00,000, 10, 12-ம் வகுப்பு பயின்ற ஒரு பெண்ணுக்கு திருமண நிதியுதவியாக ரூ.25 ஆயிரம் வீதம் 270 பயனாளிகளுக்கு ரூ.67,50,000 என மொத்தம் 600 பயனாளிகளுக்கு 2,32,50,000 நிதியுதவி மற்றும் 4.8 கிலோ தங்கம் நமது மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 16 பயனாளிகளுக்கும்,  ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரம் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த 17 பயனாளிகளுக்கும் தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 

    இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பயனாளிகளுக்கும் விரைவில் வழங்கப்படும். இதனை முழுமையாக பயனாளிகள் பெற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சித் தலைவர்   பொன்தோஸ், குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மாவட்ட சமூக நல   அலுவலர் பிரவீணா தேவி, ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், தாசில்தார் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×