search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை

    வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை

    கரூர்:

    பண்டிகை காலங்களில் கொழுந்து வெற்றிலைக்கு மவுசு கூடும். இதனால் விவசாயிகளும் நல்ல லாபத்தை பார்ப்பர்கள். ஆனால் இந்த பொங்கல் பண்டிகை கரூர் வெற்றிலை விவசாயிகளை ஏமாற்றமடைய செய்துள்ளது.
     
    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழாக்கள், கோவில்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களும் கோவில்களில் சாமிதரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெற்றிலை விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. வெற்றிலை உற்பத்தியில் தமிழகத்தில் கரூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இங்கு வேலாயுதம்பாளையம், புகளூர், லாலாபேட்டை, மாயனூர், மகாதானபுரம், திருக்காம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் 5000 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு முன்பு விவசாயிகளுக்கு பச்சைக்கொடி 104 வெற்றிலை கட்டுகளுக்கு (ஒரு கட்டில் 120 வெற்றிலைகள்) ரூ. 9 ஆயிரம் விலை கிடைத்தது. மேலும் கற்பூர வெற்றிலைக்கு ரூ. 5000 விலை நிர்ணயம் செய்யபபட்டது.
    ஆனால் பொங்கல் பண்டிகையின்போது தேவைகள் குறைந்ததால் பச்சைக்கொடி வெற்றிலை ரூ. 6000, கற்பூர வெற்றிலை கட்டுகளுக்கு ரூ. 3,500 என விலை வீழ்ச்சி அடைந்தது. இது விவசாயிகளுக்கு கடும் ஏமாற்றத்தை தந்தது.

    வெற்றிலை விவசாயத்துக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படும். ஏதாவது சிறிய அளவிலான பூச்சி தாக்குதல் ஏற்பட்டாலும் கொடியுடன் காய்ந்துவிடும்.  பெரும் சிரமத்திற்கு இடையே விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தனர். புகளூர் வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி கூறும்போது,

    மற்ற விவசாயிகளை விட வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். எப்போதும் இல்லாத அளவுக்கு புதுவித பூச்சிகளால் வெற்றிலை உற்பத்தி இந்த ஆண்டு பாதிக்கப்பட்டுள்ளது.

    இப்போது விலை வீழ்ச்சியால் மீண்டும் சாகுபடி செலவினங்களுக்கு கூட விவசாயிகளால் காசுபார்க்க முடியவில்லை. பொதுவாக பொங்கல் பண்டிகையில் வியாபாரமும், லாபமும் நன்றாக இருக்கும். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் விலை சரிந்துவிட்டது என வேதனை தெரிவித்தார்
    Next Story
    ×