என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஆவடியில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆவடியில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் குறித்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆவடி:

    ஆவடி அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் வசிப்பவர் அருள். இவருக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 12-ந் தேதி அருள் வேலைக்குச் சென்றிருந்தார் இவரது மனைவி சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது இவர்களின் குழந்தை ருத்ரா (வயது1) விளையாடிக் கொண்டிருந்த போது மாட்டு தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்தது.

    குழந்தையின் அலறல் சத்தம் கேட்டவுடன் குழந்தையை மீட்டு செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவு குழந்தை ருத்ரா உயிரிழந்தது.

    Next Story
    ×