என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அமைச்சர் எ.வ.வேலு, பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கிய போது எடுத்த படம்.
  X
  அமைச்சர் எ.வ.வேலு, பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கிய போது எடுத்த படம்.

  3 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலையில் 3 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலத்துறை சார்பில் படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். தமிழக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் மீனாம்பிகை வரவேற்றார்.

  இதில் சிறப்பு அழைப் பாளராக பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு 3 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு ரூ.25 கோடியே 57 லட்சம் மதிப்பில் திருமண நிதி உதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

  மேலும் இந்துசமய நலத்துறையின் மூலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.20 ஆயிரத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் புத்தாடைகளும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ 16 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  Next Story
  ×