என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடந்து சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலி செயின் பறித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி கருமண்டபம் ஆர். எம். எஸ். காலனி அசோக் நகர் 3-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி விஜயா (வயது 59). இவர் தனது வீட்டின் அருகாமையில் ஆர். எம். எஸ். காலனியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், விஜயா அணிந்திருந்த எட்டரை பவுன் தாலி செயினை பறித்தனர்.

    பின்னர் அவர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இரவு 7.30 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து. மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த ஒரு மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் தாலி செயினை திருடர்கள் பறித்துச் சென்றனர்.

    தொடர் திருட்டு சம்பவம் ஆர். எம். எஸ். காலனி பகுதி பெண்களை பீதி அடைய செய்துள்ளது.
    Next Story
    ×