என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
பரமத்திவேலூர் பகுதியில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, ரோஜா, அரளி, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்களை உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பூக்களை ஏலம் எடுத்து செல்வதற்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1000 க்கும், ரோஜா கிலோ ரூ.150 க்கும், முல்லைப் பூ ரூ.1000 க்கும் ஏலம் போனது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 700 க்கும், சம்பங்கி கிலோ ரூ.170 க்கும், அரளி கிலோ ரூ.400 க்கும், ரோஜா கிலோ ரூ.300 &க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.2,500 ஆயிரத்திற்கும், செவ்வந்திப்பூ ரூ.270 க்கும் ஏலம் போனது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை அதிக விலைக்கு ஏலம் எடுத்து சென்றனர். பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூ பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story