என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்.
  X
  கோப்புப்படம்.

  சுதந்திர பொன் விழா ஆண்டு போட்டிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர பொன் விழா ஆண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
  திருவாரூர்:

  திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

  இந்திய அரசின் 75-ம் சுதந்திரப் பொன் விழா ஆண்டின் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக மாநிலம் முழுவதும் 10 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் பல்வேறு போட்டிகளில் பங்குபெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  இது சம்பந்தமான விவரங்கள் இணையதள முகவரியில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தாலுகா அளவிலான போட்டிகள் வரும் 31.1.22 வரையும் மாவட்ட அளவிலான போட்டிகள் 15.2.22 முதல் 28.2.22 வரையும்.

  மாநில அளவிலான போட்டிகள் 10.3.22 முதல் 31.3.22 வரையும் இறுதியாக தேசியஅளவிலான போட்டிகள் 13.4.22 அன்றும் நடைபெறுகிறது.

  எனவே மேற்காணும் போட்டிகளில் தகுதியுள்ள அனைவரும் பங்குபெற்று இந்தியஅரசின் சுதந்திர தினவிழா சிறப்பாக நடைபெற பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

  மேலும், விவரங்களுக்கு நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×