என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  கன்னியாகுமரி அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
  கன்னியாகுமரி:

  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஜாண்வில்பிரட் இவரது மகள் ரம்யா (21) இவர் பி.எஸ்.சி முடித்துவிட்டு மார்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். 

  இந்நிலையில் திருவட்டாரை அடுத்த அருவிக்கரையை சேர்ந்தவர் ஷாஜி (25) இவர் மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. நேற்று முன்தினம் ரம்யா- ஷாஜியுடன் சென்றுள்ளார்.

  இதுகுறித்து ரம்யாவின் தந்தை ஜாண் வில்பிரட் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இதனைக் கேள்விப்பட்ட காதல் ஜோடி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் காதலில் உறுதியாக இருந்துள்ளனர்.

  ரம்யா காதலன் ஷாஜியுடன் வாழ்வதாக காவல்நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.
  Next Story
  ×