என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி கோவிலில் பக்தர்கள் வழிபட்ட காட்சி.
  X
  கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி கோவிலில் பக்தர்கள் வழிபட்ட காட்சி.

  பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
  நாகர்கோவில்:

  வைகுண்ட ஏகாதசியை யொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் களில் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
  OK-1-IMG-20220113-WA0052

  திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கோவிலில்  உள்ள சொர்க்கவாசல் திறக்கப் பட்டு அந்த வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். பெருமாளை தரிசனம் செய்வதற்கு கோவிலில் கூட்டம் அலைமோதியது.

  கன்னியாகுமரி விவேகா னந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துஉள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாஇன்று நடந்தது. 

  இதையொட்டி இன்றுஅதிகாலை 5 மணிக்கு சுப்ரபாத தரிசனமும் வெங்கடாஜலபதி சாமிக்கு பூலங்கி சேவையும் சிறப்பு வழிபாடுகளும் விசேஷ பூஜையும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி- பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

  கோவிலின் முகப்பு பக்கம் உள்ள கொடிமரம் அருகே மலர்களால் அமைக்கப்பட்டுஇருந்த சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. 

  வைகுண்ட ஏகாதசியை யொட்டி கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இன்று மாலையில் தோமாலை சேவை, இரவு பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. 
  திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி உணர்த்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கலசபூஜை, உஷபூஜை, உச்ச பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது. 

  மாலையில் புஷ்பாபிஷேகம் நடக்கிறது அதை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடக்கிறது. இரவு கருட வாகனத்தில் ஆதிகேசவப் பெருமாள் கிருஷ்ண பகவான் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

  தோவாளை கிருஷ்ண சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை யில் அபிஷேகங்கள் அலங் கார தீபாராதனை நடை பெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக் கில் கிருஷ்ணசுவாமி சொர்க்கவாசல் வழியாக நுழைந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். 

  அதன் பின்னர் சிறப்பு பூஜைகளும் அலங்கார தீபாராதனைகளும் அபிஷே கங்களும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழாவில் கலந்து கொண்ட பக்தர் களுக்கு கிருஷ்ணசாமி பக்தர்கள் சங்கம் சார்பில் முககவசம் வழங்கப்பட்டது முககவசம் அணிந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

  சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவிலில் இன்று காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. இதை தொடர்ந்து பல்லக்கில் கிருஷ்ணர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

  நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. கோவிலில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

  பறக்கை மதுசூதனப் பெரு மாள் கோவில், ஏழகரம் பெருமாள் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ண சாமி கோவில் உள்பட அனைத்து கோவில் களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
  Next Story
  ×