என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
புதுவை: பொங்கல் பரிசு இதுவரை கிடைக்கவில்லை
Byமாலை மலர்13 Jan 2022 3:00 PM IST (Updated: 13 Jan 2022 3:00 PM IST)
புதுவை மாநிலத்தில் இதுவரை பொங்கல் பொருட்கள் கிடைக்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை அரசின் சார்பில் பொங்கல் பரிசாக பச்சரிசி,
வெல்லம், பச்சைப்பயிறு, உளுந்து உட்பட 490 மதிப்பிலான 10 பொருடங்கள் அனைத்து குடும்பத்துக்கும் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
கதிர்காமம் தொகுதியில் ரேசன்கடையில் பொங்கல் பரிசு வழங்கும் பணியையும் ரங்கசாமி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அனைத்து ரேசன்கடை யிலும் பொங்கலுக்குள் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரையிலும் பொங்கல் பரிசு ரேசன் கடைகளுக்கு வந்து சேரவில்லை. பொதுமக்கள் ரேசன் கடைகளை அணுகி பரிசு பொருள் எப்போது வரும்? என கேட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.
அதிலும் 2 கிலோ சர்க்கரை மட்டுமே ரேசன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு அறிவிக்கப் பட்ட 10 கிலோ அரிசி யும் இதுவரை வழங்கப்படவில்லை.
Next Story
×