என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  திண்டிவனம் அருகே கார் மோதி பெண் பலி- தப்பி சென்ற டிரைவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தப்பி சென்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
  திண்டிவனம்:

  திண்டிவனம் அருகே பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வந்தார்.

  கடந்த 10-ந்தேதி மாலை இவர் வேலையை முடித்துவிட்டு திண்டிவனம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாதிரி ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் செல்வி மீது வேகமாக மோதியது. இதில், செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு மாயமான காரை, ஒலக்கூர் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தனர்.

  அதில், விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் திருச்சி மாவட்டம், பச்சாம்பேட்டை கிராமம் திருமணமேடு அஞ்சல், லால்குடி தாலுகாவை சேர்ந்த செந்தில்பிரபு என்பவரை நேற்று கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×