என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாமி தரிசனம்
  X
  சாமி தரிசனம்

  வைகுண்ட ஏகாதசி: கோவை பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை பெருமாள் கோவில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது.
  கோவை:

  மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகுண்ட ஏகாதசி என போற்றப்படும் இந்த நாளில் பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. 

  கொங்கு மண்டலத்தில் வைணவ ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது காரமடையில் உள்ள அரங்க நாத சுவாமி கோவில். இந்த கோவிலில் கடந்த 3& ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா திருமொழி திருநாள் என்ற பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

  அதனை தொடர்ந்து தினமும் அரங்கநாத பெருமாளை போற்றி 12 ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்களை நல்லான் சக்ரவர்த்தி சுவாமிகள், சுதர்சன பட்டர் சுவாமிகள் ஆகியோர் பெருமாள் முன் னிலையில் பாடி வந்தனர்.

  சிகர நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் அரங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள்   மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

  அதனை தொடர்ந்து அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேஷ வாகனத்தில் கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து  ஆண்டாள் தாயார் சன்னதி முன் வீற்றிருந்தார். 

  காலை 5.45 மணிக்கு அரங்கநாத பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது. அதன் வழியே சுவாமி   வெளியே வந்தார். அப்போது கோவி லில் இருந்த ஊழியர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் விண்ணெதிர கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

  தொடர்ந்து சொர்க் கவாசல் வெளியே வீற்றிருந்த நம்மாழ்வார், ராமனு ஜர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கும் பெருமாள் காட்சி தந்தார். தொடர்ந்து சுவாமி அலங்கார பந்தலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
   
  கொரேனா பரவல் காரணமாக சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. காலை 6 மணிக்கு பிறகே கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

  நேரம் செல்ல, செல்ல கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, கோவை உள் ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவிலான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். 

  பக்தர்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் காரமடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டிருந்தனர். அவர்கள் கூட்டம், கூடாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் பக்தர் களை அறிவுறுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், கோவில் செயல் அலுவலருமா லோகநாதன், கோவில்  அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

  அன்னூர் தேவி பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 4 மணிக்கு  சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி னார்.

  தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி வலம் வந்து சொர்க்க வாசல் முன்பு வந்ததும் சொர்க்க வாசல் கதவிற்கு சிறப்பு ஆராதனை செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.முதலில் சுவாமி சென்றது தொடர்ந்து பக்தர்களும் வரிசையாக சென்று சுவாமியை தரினம் செய்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  சொர்க்கவாசலை முன்னிட்டு அதிகாலை முதலே  அன்னூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

  இதேபோல் பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.கோவை மாநகரில் பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாள் கோவில், ராம்நகர் ராமர் கோவில், பேட்டை உப்பார வீதி கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில், சலீவன் வீதி வேணுகோபாலசுவாமி கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
  Next Story
  ×