search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி
    X
    பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி

    மருதமலை கோவில் சாலையில் 200 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

    கோவை மருதமலை சாலையில் வனத்துறையினர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
    கோவை:

    கோவை மருதமலை செல்லும் வழியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு கிடந்த யானை சாணத்தில் பிளாஸ்டிக் குப்பைகள், முககவசம்  உள்ளிட்டவை ஏராளமாக கலந்திருந்தன. இவற்றை ஆராய்ந்த வன உயிரின ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தினர். 

    வனப்பகுதியையொட்டி மற்றும் யானைகளின் வழித்தடங்களில் வசிப்போர் வீசும் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகளை உண்ணும் நிலைக்கு யானைகள் தள்ளப்பட்டிருப்பதாகவும்,  ஒரு யானையின் சாணத்தில் இவ்வளவு பிளாஸ்டிக் இருப்ப தாகவும், இவ்வாறு எவ்வளவு யானைகள் உண்டுள்ளது என தெரியவில்லை.  இது தொடர்ந்தால் யானைகள் உயிரிழப்பு ஏற்படும் என வேதனையை தெரிவித்தனர்.

    யானைகள் உண்ட பிளாஸ் டிக் பொருட்கள் செரிமானம் ஆகாமல் அப்படியே வெளியேறி உள்ளது.இதனால் யானைகளின் இரைப்பை புண்ணாகி செரிமான மண்டலமே பாதிக்கப்படும் என்றுகால்நடை டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே யானைகளைப் பாதுகாக்க அவை நடமாடும் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு உயிரின ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.

    இதைதொடர்ந்து  கோவை- வனத்துறை சார்பில் மருதமலை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணிகள் மேற் கொள்ளப்பட்டது.  மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள  ரோட்டில் பிளாஸ்டிக், மற்றும் மக்கும் குப்பைகள் அகற்றப்பட்டன. 

    மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் 25 பேர் மற்றும் மருதமலை மலைவாழ் மக்கள் கிராமத்தை சார்ந்த தூய்மை பணியாளர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் தூய்மைப்பணியில் ஈடுபட்ட னர்.

    இதில் சுமார் 200 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் கோவில் அருகே உள்ள கடைகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கோவில் துணை கமிஷனர் உடன் ஆலோசனை செய்து கோவில் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டது. 
    Next Story
    ×