என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஊட்டி அரசு மருத்துவ கல்லூரியில் நடப்பாண்டில் 150 மாணவர்கள் சேர்க்கை
Byமாலை மலர்13 Jan 2022 2:29 PM IST (Updated: 13 Jan 2022 2:29 PM IST)
புதிதாக தொடங்கப்பட்ட ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.461.18 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி கட்டிடத்தினை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:
முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் தேவை அறிந்து அதற் கேற்றவாறு பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்கிற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
அதேபோல் வருமுன் காப்போம் திட்டம், வாகன விபத்தில் சிக்கி காயமடைந்து 48 மணி நேரத்திற்குள் அந்த நபரை மருத்துவமனைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் அதற்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். அதேபோல் நீட் தேர்வை பொறுத்தவரை ஏழை, எளிய மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தொடர்ந்து நீட் விலக்கு கோரிக்கையினை மத்திய அரசிடம் முன்னெடுத்துக் கொண்டே இருக்கும்.
ஊட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ள கல்லூரி யில் உடற்கூறியல், உயிர் வேதியியல், நோய் குறியியல், நுண்ணுயிரியல், மருந்தியல் போன்ற மருத்துவத் துறைகளுக்கான ஆய்வகங்கள், விரிவுரை கூடங்கள், நூலகக் கட்டிடம், தேர்வுக் கூடம் மற்றும் செயல்முறை விளக்கக்கூடங்கள் ஆகிய வசதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக தனித்தனியாக விடுதிகள், செவிலியர் விடுதி, பயிற்சி மருத்துவர் விடுதி, பேராசிரியர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்காக குடியிருப்பு வசதிகள் 28 கட்டிட தொகுப்புகளாக 2,73,130 சதுரடி பரப்பளவில் கட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து கட்டிடங்களும் மலைப்பிர தேசத்தில் ஏற்படும் நிலச்சரிவினை தடுக்கும் வகையில் உரிய தடுப்புச்சுவருடன் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்கள் மற்றும் சாலை வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் இக்கல்லூரிக்கு நடப்பு கல்வி ஆண்டு (2021&2022) முதல் 150 மாண வர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட கலெக் டர் அம்ரித், எம்.எல்.ஏ.க்கள் பொன்.ஜெயசீலன், வானதி சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் மனோகரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X