என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILE PHOTO
  X
  FILE PHOTO

  மின்சாரம் பாய்ந்து பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குளித்தலையில் குளிப்பதற்காக சுடுதண்ணீர் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து பெண் பலியானார்.

  கரூர்:

  கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சின்னகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி பொற்செல்வி (வயது 48). இவர் குளிப்பதற்காக சுடு தண்ணீர் வைக்க ஹீட்டரை இயக்கியுள்ளார்.

  அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த கணவர் தங்கராசு, மயங்கி கிடந்த பொற்செல்வியை மீட்டு, பஞ்சப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பொற்செல்வி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

  இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாதனங்களை இயக்கும்போது மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×