என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புதுவை கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா நடந்தது.
  X
  புதுவை கவர்னர் மாளிகையில் பொங்கல் விழா நடந்தது.

  புதுவை கவர்னர் மாளிகையில் தமிழர் பாரம்பரியத்துடன் பொங்கல் விழா: தமிழிசை, ரங்கசாமி பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டனர்
  புதுச்சேரி:

  புதுவை கவர்னர்  மாளிகையில் பொங்கல் விழா  நடை பெற்றது. 

  கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன்,  சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். 

  உயர் அதிகாரிகள் பலரும் வேட்டி அணிந்து வந்திருந்தனர். பெண் அதிகாரிகள் பட்டு சேலையில் வந்து விழாவில் கலந்து கொண்டனர். கவர்னர் மாளிகை வாசலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. 

  தமிழர்களின் பாரம் பரியத்தை விளக்கும் வகையில் மாட்டு வண்டி மற்றும் உழவு  தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் வைத்து பொங்கல் விழா நடந்தது. 

  தொடர்ந்து  மாணவ-மாணவிகள் சார்பில் தமிழ் பாரம்பரிய  கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

  Next Story
  ×