search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தனியார் பஸ் கண்ணாடி உடைத்து கண்டக்டரிடம் பணம் பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பகுதியில் தனியார் பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சேலம்:

    தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து சேலத்துக்கு நேற்று இரவு ஒரு தனியார்பஸ் வந்தது. சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பகுதியில் வந்தபோது முன்னால் குடிபோதையில் வாகனத்தில்  சென்ற 2 பேர் பஸ்சை வழிமறித்தனர். 

    அவர்கள் திடீரென பஸ் கண்ணாடியை உடைத்து கண்டக்டரிடம் தகராறு செய்தனர்.  மேலும் கண்டக்டர் பையில் இருந்த ரூ.13 ஆயிரத்து 500 யையும் பறித்ததாக தெரிகிறது. 

    இதுபற்றி அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதிகாரிப்பட்டியை சேர்ந்த லட்சுமணி (வயது 25), குள்ளம்பட்டியைச்சேர்ந்த சங்கர் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×